/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆசிய 'பவர் லிப்டிங்' சாம்பியன்ஷிப்; 4 தங்கம் வென்ற மாங்காடு வீராங்கனை
/
ஆசிய 'பவர் லிப்டிங்' சாம்பியன்ஷிப்; 4 தங்கம் வென்ற மாங்காடு வீராங்கனை
ஆசிய 'பவர் லிப்டிங்' சாம்பியன்ஷிப்; 4 தங்கம் வென்ற மாங்காடு வீராங்கனை
ஆசிய 'பவர் லிப்டிங்' சாம்பியன்ஷிப்; 4 தங்கம் வென்ற மாங்காடு வீராங்கனை
UPDATED : டிச 12, 2025 08:56 AM
ADDED : டிச 12, 2025 05:16 AM

சென்னை: ஆசிய 'பவர் லிப்டிங்' சாம்பியன்ஷிப் போட்டியில், மாங்காடு வீராங்கனை நான்கு தங்க பதக்கங்கள் வென்று, சாதனை படைத்தார்.
ஆசிய பவர் லிப்டிங் கூட்டமைப்பு, இந்திய பவர் லிப்டிங் கூட்டமைப்பு இணைந்து, ஆசிய கிளாசிக் ஓபன் மாஸ்டர் 'பவர் லிப்டிங்' எனும் வலுத்துாக்கும் போட்டியை துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடத்தின.
இருபாலருக்குமான ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட் ஆகிய பிரிவுகளில், எடை அடிப்படையில் போட்டிகள் நடந்தன. இதில், இந்தியா சார்பில் 15 வீரர்கள், 19 வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், சென்னை மாங்காடைச் சேர்ந்த அமுத சுகந்திபாபு, 43, என்பவர், 69 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார்.
இவர், ஸ்குவாட் பிரிவில், 160 கிலோ, பெஞ்ச் பிரஸ் பிரிவில், 92.5 கிலோ, டெட் லிப்ட் பிரிவில், 165 கிலோ எடை துாக்கி, மூன்று பிரிவிலும் தலா மூன்று தங்க பதக்கம் வென்றார்.
இவர், ஒட்டுமொத்தமாக 417.5 கிலோ துாக்கியதால், மற்றொரு தங்கமும் வென்று அசத்தினார்.
மேலும், அவரது பிரிவில், 'சிறந்த லிப்டர்' என்ற பட்டத்தையும் கைப்பற்றி, தமிழகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் தென் ஆப்ரிக்காவில் நடந்த சர்வதேச போட்டியில், இரண்டு தங்கம், மூன்று வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக வலுதுாக்கும் போட்டி
பயிற்சியாளர், மாணவி சாதனை
மணலிபுதுநகர்: ரஷ்யாவின் மாஸ்கோவில் 'உலக வலுதுாக்கும் போட்டி நடந்தது. இதில், 30 நாடுகளைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இதில், மணலிபுதுநகரை சேர்ந்த கார்த்திக், 38, என்பவர் 67.5 கிலோ சீனியர் ஓபன் பிரிவில், மொத்தமாக, 467.5 கிலோ எடை துாக்கி முதலிடம் பிடித்தார்.
இவர் பயிற்சியாளராகவும் உள்ளார். அவரது மாணவியான, அம்பத்துாரைச் சேர்ந்த லத்திபா சிராஜுதீன், 42, என்பவர், 82.5 கிலோ எடைபிரிவில், 185 கிலோ எடை துாக்கி, இரண்டு தங்கம் வென்றுள்ளார்.

