/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பால் பேட்மின்டன் போட்டியில் வள்ளியம்மை கல்லுாரி அபாரம்
/
பால் பேட்மின்டன் போட்டியில் வள்ளியம்மை கல்லுாரி அபாரம்
பால் பேட்மின்டன் போட்டியில் வள்ளியம்மை கல்லுாரி அபாரம்
பால் பேட்மின்டன் போட்டியில் வள்ளியம்மை கல்லுாரி அபாரம்
ADDED : டிச 12, 2025 05:21 AM

காட்டாங்கொளத்துார்: அண்ணா பல்கலைக்கு உட்பட்ட பொறியியல் கல்லுாரிகளுக்கான நான்காவது மண்டல பால் பேட்மின்டன் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துாரில் நடந்தது. இறுதிப்போட்டியில், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை அணியும், சாய்ராம் கல்லுாரி அணியும் மோதின. இதில், 3 - 0 என்ற செட் கணக்கில், வள்ளியம்மை கல்லுாரி அணி வெற்றி பெற்றது.
மாநில விளையாட்டு போட்டி சென்னை பள்ளிகள் அசத்தல்
சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருச்சியில் மாநில விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இதில், மாணவியருக்கான 17 வயது பிரிவில், பேட்மின்டன் ஒற்றையரில் அரும்பாக்கம், சிந்திமாடல் பள்ளியும், இரட்டையரில் முகலிவாக்கம் எம்.கே.எம்., மெட்ரிக் பள்ளியும் முதலிடங்கள் பிடித்தன. கால்பந்தில் பெரம்பூர் டான்போஸ்கோ இரண்டாமிடம் கைப்பற்றியது. மாணவருக்கான போட்டியில், எறிப்பந்தில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியும், பூப்பந்தாட்டத்தில் அண்ணா நகர் ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியும் முதலிடம் பிடித்தன. டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் அழகப்பா பள்ளியும், கூடைப்பந்தில் அடையாறு லேடி சிவசாமி பள்ளியும் முதலிடத்தை கைப்பற்றின.
தேசிய 'பாடி - பில்டிங்' ஐ.சி.எப் அணி அசத்தல்
சென்னை: தென்கிழக்கு ரயில்வே சார்பில், இந்திய ரயில்வேகளுக்கு இடையிலான 39வது அகில இந்திய ரயில்வே உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் சக்ரதர்பூரில் நடந்தது. இதில், தமிழக அணி சார்பில், சென்னை ஐ.சி.எப்., அணி வீரர் ஹரி பாபு, 37, என்பவர் 75 கிலோ பிரிவில் போட்டியிட்டு தங்கப் பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளார். 100 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில், சென்னையின் ராஜ்குமார் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

