/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை மாத்திரை விற்ற மணிப்பூர் வாலிபர் கைது
/
போதை மாத்திரை விற்ற மணிப்பூர் வாலிபர் கைது
ADDED : ஜன 06, 2025 02:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவான்மியூர்:பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் பகுதியில், போதை மாத்திரை புழக்கம் அதிகமாக இருந்தது. அதுகுறித்த முகாரின்படி போலீசார் விசாரித்து வந்தனர்.
திருவான்மியூர் போலீசார் விசாரணையில், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஹம்ஜாமுவான், 25, என்பவர், போதை மாத்திரை விற்பனை செய்வது தெரிந்தது.
சாஸ்திரி நகரில் தங்கியிருக்கும் அவர், கடற்கரைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து, போதை மாத்திரைகளை விற்பனை செய்தார்.
போலீசார், நேற்று ஹம்ஜாமுவானை கைது செய்து, அவரிடமிருந்த 1,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

