/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாட்டுப்புற கலைகளால் களைகட்டிய மெரினா
/
நாட்டுப்புற கலைகளால் களைகட்டிய மெரினா
ADDED : நவ 03, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளால், மெரினாவில் களைகட்டியது.
சென்னை மெரினா கடற்கரை, நீச்சல் குளம் அருகில் உலகத்தரம் வாய்ந்த நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக மாற்றப்பட்டது. இங்கு, தமிழக பாரம்பரிய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மாநகராட்சி சார்பில், நேற்று மாலை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில், கானா பாடல், பண்பாடு, விவசாயி வாழ்க்கையை வெளிப்படுத்தும் நாட்டுப்புற பாடல்கள், வீரம், வன உயிரினங்களின் உறவை வெளிப்படுத்தும் புலியாட்டம், நெடுங்குச்சியாட்டம், மான் கொம்பு ஆட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இசைக்கு ஏற்ப பொதுமக்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.

