/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டெங்கு பரவல் குறைந்துள்ளது மேயர் பிரியா தகவல்
/
டெங்கு பரவல் குறைந்துள்ளது மேயர் பிரியா தகவல்
ADDED : மார் 07, 2024 12:41 AM

ஓட்டேரி, சென்னையில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், 'ட்ரோன்'களை பயன்படுத்தி மருந்து தெளிக்கும் பணியை, சென்னை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது.
ஓட்டேரி நல்லா கால்வாயில், ட்ரோன் வாயிலாக மருந்து தெளிக்கும் பணிகளை, அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, மேயர் பிரியா கூறியதாவது:
கொசு தொல்லை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், கொசு ஒழிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
440 மருந்து தெளிப்பான், 109 பவர் ஸ்ப்ரேயர், 287 பேட்டரி ஸ்பிரேயர் இயந்திரங்கள், வீடு வீடாக மருந்து தெளிக்கும் 219 இயந்திரங்கள் வாயிலாகவும், ஆறு ட்ரோன்கள் வாயிலாகவும், கால்வாய்களில், கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, 31 டெங்கு பாதிப்பு இருந்தது. இந்த ஆண்டு 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைந்துள்ளது.
குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில், கொசு உற்பத்தியாகும் சூழல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

