/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.சி.சி., டி - 10 கிரிக்கெட் 16 பள்ளிகள் பலப்பரீட்சை
/
எம்.சி.சி., டி - 10 கிரிக்கெட் 16 பள்ளிகள் பலப்பரீட்சை
எம்.சி.சி., டி - 10 கிரிக்கெட் 16 பள்ளிகள் பலப்பரீட்சை
எம்.சி.சி., டி - 10 கிரிக்கெட் 16 பள்ளிகள் பலப்பரீட்சை
ADDED : ஏப் 24, 2025 11:57 PM
சென்னை,
எம்.சி.சி., பப்ளிக் பள்ளி சார்பில், டி - 10 கிரிக்கெட் போட்டி, சேத்துப்பட்டு பள்ளி வளாகத்தில், நேற்று காலை துவங்கின.
போட்டியில், தி ஹிந்து சீனியர், சென்னை பப்ளிக், அகர்வால் வித்யாலயா, செயின்ட் பீட்ஸ், பவன்ஸ் ராஜாஜி, டி.ஏ.டி., - எம்.சி.சி., உள்ளிட்ட 16 பள்ளி அணிகள் பங்கேற்றன.
அணிகள் 'ஏ' மற்றும் 'பி' மைதானங்களில், தலா எட்டு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நேற்று காலை நடந்த முதல் போட்டியில், தி ஹிந்து சீனியர் பள்ளி மற்றும் ஸ்ரீநிகேதன் பாடசாலை அணிகள் எதிர்கொண்டன.
'டாஸ்' வென்ற தி ஹிந்து சீனியர் பள்ளி, முதலில் பேட்டிங் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 97 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, ஸ்ரீநிகேதன் பாடசாலை அணி, 10 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து, 93 ரன்கள் அடித்து, நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டிகள் தொடர்ந்து, மூன்று நாட்கள் நடக்கின்றன.

