/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் கோப்பையில் சாதித்த 2,830 பேருக்கு பதக்கம், பரிசு
/
முதல்வர் கோப்பையில் சாதித்த 2,830 பேருக்கு பதக்கம், பரிசு
முதல்வர் கோப்பையில் சாதித்த 2,830 பேருக்கு பதக்கம், பரிசு
முதல்வர் கோப்பையில் சாதித்த 2,830 பேருக்கு பதக்கம், பரிசு
ADDED : செப் 29, 2024 12:33 AM

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்டம் மற்றும் மண்டல அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், சென்னையில் கடந்த 10ம் தேதி துவங்கின.
பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளி உட்பட ஐந்து பிரிவுகளில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் பங்கேற்க, சென்னை மாவட்டத்தில், 62,452 வீரர் - வீராங்கனையர் பதிவு செய்தனர்.
போட்டிகள், நேரு விளையாட்டு அரங்கம், எம்.ஆர்.கே., ஹாக்கி அரங்கம், சென்னை பல்கலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்தன.
கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடந்த மாவட்ட அளவிலான போட்டியில், 8,812 மாணவியர் உட்பட மொத்தம் 25,419 வீரர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
அதேபோல், மண்டல அளவில் நடந்த வாலிபால், குத்துச்சண்டை, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில், 417 மாணவியர் உட்பட 1,089 வீரர்கள் பங்கேற்றனர்.
மண்டல மற்றும் மாவட்ட அளவில் நடந்த அனைத்து போட்டிகளில், மொத்தம் 2,830 வீரர் - வீராங்கனையர் வெற்றி பெற்று அசத்தினர். அவர்களுக்கு, நேரு விளையாட்டு அரங்கில் நேற்று அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மேயர் பிரியா உள்ளிட்டோர் பதக்கம் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினர்.
மாவட்ட அளவில் முதலிடத்தையும், மண்டல அளவில் முதல் நான்கு இடங்களையும் பிடித்த மாணவ - மாணவியர், அடுத்த மாதம் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்க உள்ள, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.