/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குறுவட்ட அளவில் விளையாட்டுகள் மேடவாக்கம் அரசு பள்ளி அபாரம்
/
குறுவட்ட அளவில் விளையாட்டுகள் மேடவாக்கம் அரசு பள்ளி அபாரம்
குறுவட்ட அளவில் விளையாட்டுகள் மேடவாக்கம் அரசு பள்ளி அபாரம்
குறுவட்ட அளவில் விளையாட்டுகள் மேடவாக்கம் அரசு பள்ளி அபாரம்
ADDED : ஆக 18, 2025 02:42 AM
சென்னை:குறுவட்ட அளவில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில், மேடவாக்கம் அரசு பள்ளி மாணவ - மாணவியர் வெற்றி பெற்று அசத்தினர்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில், குறுவட்ட அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், மேடவாக்கம் குறுவட்ட அளவிலான போட்டிகள், கடந்த ஒரு மாதமாக, கீழ்கட்டளை பகுதியில் நடத்தப்பட்டன.
அதில், 36 பள்ளி களைச் சேர்ந்த 730க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு, ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், மேடவாக்கம் அரசு பள்ளி மாணவர்கள், சூப்பர் சீனியர் கபடி, சூப்பர் சீனியர் வளையப்பந்து, சீனியர் கையுந்து பந்து, சீனியர் பூப்பந்து ஆகிய போட்டிகளில் முதலிடங்களை பிடித்தனர். அதேபோல் மாணவியரில், ஜூனியர் மற்றும் சீனியர் பூப்பந்து, வளையப்பந்து போட்டிகளில் முதலிடங்களை பிடித்தனர்.
தடகளப் போட்டிகளிலும், இப்பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பதக்கம் வென்ற மாணவ - மாணவியரை மேடவாக்கம் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் தீபா பாராட்டினார்.