/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பிக்கில் பால் பிரீமியர் லீக்' சென்னையில் துவக்கம்
/
'பிக்கில் பால் பிரீமியர் லீக்' சென்னையில் துவக்கம்
'பிக்கில் பால் பிரீமியர் லீக்' சென்னையில் துவக்கம்
'பிக்கில் பால் பிரீமியர் லீக்' சென்னையில் துவக்கம்
ADDED : பிப் 15, 2025 08:47 PM

சென்னை:எம்.ஜி.எம்., மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு பிக்கில் பால் சங்கம் சார்பில், டி.என்.பி.பி.எல்., எனும், 'பிக்கில் பால் பிரீமியர் லீக்' போட்டி, துவங்கியது.
போட்டிகள், பெரியமேடில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், இரண்டு நாட்கள் நடக்கின்றன. மொத்தம், 16 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முதல் நாள் போட்டியை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, நடிகர் சதீஷ் மற்றும் டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் ஆகியோர் துவக்கி வைத்தனர். மூவரும் வீரர்களுடன் விளையாடினர்.
அப்போது, மேகநாத ரெட்டி பேசுகையில், ''பிக்கில் பால் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகிறது. பிரீமியர் லீக் போன்ற முயற்சியால் விளையாட்டையும், வீரர்களையும் ஊக்கவிக்க முடியும். இந்த விளையாட்டு வீரர்கள், தமிழகத்தில் வலுவாக வளர வேண்டும் என எதிர்பார்க்கிறேன்,'' என்றார்.

