/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.256 கோடியில் 5 புது கட்டடங்கள் ஸ்டான்லியில் அமைச்சர் அடிக்கல்
/
ரூ.256 கோடியில் 5 புது கட்டடங்கள் ஸ்டான்லியில் அமைச்சர் அடிக்கல்
ரூ.256 கோடியில் 5 புது கட்டடங்கள் ஸ்டான்லியில் அமைச்சர் அடிக்கல்
ரூ.256 கோடியில் 5 புது கட்டடங்கள் ஸ்டான்லியில் அமைச்சர் அடிக்கல்
ADDED : மார் 07, 2024 12:40 AM

ராயபுரம், சென்னை, ராயபுரம், ஸ்டான்லி மருத்துவமனையில் 256.50 கோடி ரூபாய் செலவிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இதில், தீவிர சிகிச்சை மற்றும் அவசர பிரிவு கட்டடம், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டடம், செவிலியர் பயிற்சி பள்ளி கட்டட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அரசு பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் கூடுதல் தளங்கள் மற்றும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் புதிய அடுக்குமாடி உயர்தர சிகிச்சைக்கு கட்டடங்களும் அமைக்கப்பட உள்ளன.
ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார்.
மேலும் புனரமைக்கப்பட்ட அவசர சிகிச்சை மற்றும் எலும்பு முறிவு அறுவை அரங்கங்களை திறந்து வைத்து, உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவசர ஊர்தி வாகனங்களையும் அமைச்சர் வழங்கினார்.
இதில், ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜி, -- வடசென்னை தி.மு.க., எம்.பி., கலாநிதி வீராசாமி, பெரம்பூர் எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர், ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்க இயக்குனர் சங்குமணி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் சுப்ரமணியன் கூறியதாவது:
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, வடசென்னை மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றி வருகிறது. மருத்துவமனையில் தினமும் 200க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்டான்லி மருத்துவமனையில், 65க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. செவிலியர் மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கான தங்கும் விடுதி 13 கோடி ரூபாயில், 12 மாதங்களில் கட்டப்படும். அதிநவீன சிகிச்சை பிரிவு கட்டடம் 112 கோடி ரூபாயில் 18 மாதங்களிலும், நவீன சலவையகம் 12 கோடி செலவில் 12 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, கை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தொடர்பான சிகிச்சைகளும் இங்கு சிறப்பாக நடக்கிறது.
குடல் அழற்சிக்கு பழைய சாதம் அற்புதமான தீர்வு என ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வில் கண்டறிந்தனர். எனவே, வாரத்திற்கு இருமுறை நானும் பழைய சாதம் சாப்பிடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

