/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆலப்பாக்கம் மழைநீர் வடிகாலில் விடுபட்ட பகுதி இணைப்பு
/
ஆலப்பாக்கம் மழைநீர் வடிகாலில் விடுபட்ட பகுதி இணைப்பு
ஆலப்பாக்கம் மழைநீர் வடிகாலில் விடுபட்ட பகுதி இணைப்பு
ஆலப்பாக்கம் மழைநீர் வடிகாலில் விடுபட்ட பகுதி இணைப்பு
ADDED : நவ 16, 2024 12:42 AM

மதுரவாயல், ஆலப்பாக்கம் ஏரி உபரி நீரால் ஏற்படும் பாதிப்பை குறைக்க, மழைநீர் வடிகால் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
வளசரவாக்கம் மண்டலம், 146வது வார்டு மதுரவாயல் ---- ஆலப்பாக்கம் சாலையில், ஆலப்பாக்கம் ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரி, ஆக்கிரமிப்புகளால், 140 ஏக்கர் பரப்பளவில் இருந்து 4 ஏக்கராக சுருங்கியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு கனமழையின் போது, ஆலப்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்ததால், 144, 146, 147, 148 ஆகிய வார்டுகள் மூழ்கின. மழை ஓய்ந்த பிறகும், இந்த பகுதிகள் 10 நாட்களுக்கு மேல் மிதந்தன.
தொடர்ந்து மழைக்காலத்தில் ஏரி நிரம்பி வழிந்து, அதை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் மின் மோட்டார் அமைத்து, குறிப்பிட்ட அளவிற்கு நீர் வெளியேற்றப்பட்டது.
இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் மழைநீர் வடிகால், ஆலப்பாக்கம் பிரதான சாலை வழியாக, மதுரவாயல் கூவம் ஆற்றிற்கு செல்கிறது. இந்த மழைநீர் வடிகாலில், 110 மீட்டர் துாரம் தனியார் இடத்தில் வருவதால், பல ஆண்டுகளாக இணைக்கப்படாமல் இருந்தது.
தற்போது, அப்பகுதியில் 43 லட்சம் ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அதேபோல், ஏரியில் இருந்து ஆலப்பாக்கம் பிரதான சாலையின் குறுக்கே, 15 லட்சம் ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளால், வரும் மழைக்காலத்தில் ஏரி உபரி நீர், மழைநீர் வடிகால் வாயிலாக வெளியேறும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.