/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்தில் சிக்கிய தம்பதிக்கு எம்.எல்.ஏ., உதவிக்கரம்
/
விபத்தில் சிக்கிய தம்பதிக்கு எம்.எல்.ஏ., உதவிக்கரம்
விபத்தில் சிக்கிய தம்பதிக்கு எம்.எல்.ஏ., உதவிக்கரம்
விபத்தில் சிக்கிய தம்பதிக்கு எம்.எல்.ஏ., உதவிக்கரம்
ADDED : மார் 02, 2024 12:20 AM
திருவொற்றியூர்,
எண்ணுார், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் நாராயணன், 45; மீனவர். இவரது மனைவி சீதாலட்சுமி, 36. இருவரும், நேற்று காலை, ராயபுரம் தனியார் மருத்துவமனைக்கு செல்ல, இருசக்கர வாகனத்தில் எண்ணுார் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் சந்திப்பு அருகே, பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில், தம்பதி படுகாயமடைந்தனர்.
அந்த நேரத்தில் அவ்வழியாக காரில் சென்றுகொண்டிருந்த, திருவொற்றியூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு, தன் காரில் ஏற்றிச் சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும், மருத்துவ செலவு முழுதுமாக ஏற்பதாக கூறினார். எம்.எல்.ஏ.,வுக்கு, காயமடைந்த தம்பதி நன்றி தெரிவித்தனர்.