/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புயலுக்கு 100க்கும் மேற்பட்ட பைபர் படகு இன்ஜின்கள் சேதம்
/
புயலுக்கு 100க்கும் மேற்பட்ட பைபர் படகு இன்ஜின்கள் சேதம்
புயலுக்கு 100க்கும் மேற்பட்ட பைபர் படகு இன்ஜின்கள் சேதம்
புயலுக்கு 100க்கும் மேற்பட்ட பைபர் படகு இன்ஜின்கள் சேதம்
ADDED : டிச 06, 2025 05:02 AM
காசிமேடு: 'டிட்வா' புயலால் 100க்கும் மேற்பட்ட பைபர் படகு இன்ஜின்கள் பழுதானதாக கூறப்படும் நிலையில், படகிற்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 100க்கும் மேற்பட்ட பைபர் படகு இன்ஜின்களை, மீனவர்கள் கழற்றி படகின் மீது வைத்திருந்த நிலையில், அவை மணல் காற்றால் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
எனவே, படகிற்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறிய தாவது:
'டிட்வா' புயலால் கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகளின் இன்ஜின்கள் சேதமடைந்தன.
எனவே, மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பார்வையிட்டு, பைபர் படகு இன்ஜின்களுக்கு தலா 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

