/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஆர்.எப்., கோப்பை வாலிபால் எம்.சி.சி., பள்ளி 'சாம்பியன்'
/
எம்.ஆர்.எப்., கோப்பை வாலிபால் எம்.சி.சி., பள்ளி 'சாம்பியன்'
எம்.ஆர்.எப்., கோப்பை வாலிபால் எம்.சி.சி., பள்ளி 'சாம்பியன்'
எம்.ஆர்.எப்., கோப்பை வாலிபால் எம்.சி.சி., பள்ளி 'சாம்பியன்'
ADDED : நவ 13, 2024 09:16 PM

சென்னை:எம்.சி.சி., பள்ளி மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளை, சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி வளாகத்தில் நடத்தின.
இதில், வாலிபால் மற்றும் பேட்மின்டன், கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. போட்டியில், செட்டிநாடு வித்யாஷ்ரம், கே.பி.ஜே., குருகுலம், எம்.சி.சி., - லிட்டில் பிளவர் உள்ளிட்ட 16 பள்ளிகள் பங்கேற்றன.
வாலிபால் போட்டியில், 16 அணிகள் எதிர்கொண்டன. இதில், அனைத்து போட்டிகள் முடிவில், எம்.சி.சி., பள்ளி, கே.பி.ஜே., குருகுலம் அணிகள், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
விறுவிறுப்பான இப்போட்டியில், 25 - 21, 25 - 23 என்ற கணக்கில் எம்.சி.சி., பள்ளி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.
வெற்றி பெற்ற அணிக்கு, எம்.சி.சி., பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபதாஸ் தினகரன் பரிசுகளை வழங்கினார்.