/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் போராட்டம்
/
எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : செப் 16, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்:திருவொற்றியூர், விம்கோ நகரில் எம்.ஆர்.எப்., டயர் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கு, 820 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தை நிறுவனம் செயல்படுத்தக் கூடாது; ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு முன்பணத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 10ம் தேதி முதல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு, பேருந்து, உணவு உள்ளிட்ட வசதிகளையும் நிறுவனம் நிறுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், நேற்று நான்காவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.