/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரும் 25ல் காளான் வளர்ப்பு பயிற்சி
/
வரும் 25ல் காளான் வளர்ப்பு பயிற்சி
ADDED : அக் 22, 2024 12:09 AM
சென்னை, கிண்டி, சிப்பெட் கல்லுாரி எதிரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வரும் 24ம் தேதி மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில், மண்புழுக்களின் வகைகள், அவற்றை வளர்க்கும் முறைகள், பயிர் கழிவுகள், பண்ணை கழிவுகளை சேகரித்தல், உர உற்பத்தி, வணிக ரீதியாக உரம் தயாரிக்கும் முறை உள்ளிட்டவை கற்பிக்கப்படும்.
அடுத்த நாளான 25ம் தேதி, காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும். இதில் காளான் குடில் அமைத்தல், காளான் வித்து, படுக்கை தயாரித்தல், தொற்று நீக்கம் செய்தல், காளான் அறுவடை, உற்பத்திக்கான வரவு -- செலவுகள் குறித்து, தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சி அளிப்பர்.
ஒவ்வொரு பயிற்சிக்கும் கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். விருப்பமுடையோர் 044 - 2953 0048 என்ற தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும்.
இத்தகவலை தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிற்சி மைய தலைவர் அசோக் தெரிவித்துள்ளார்.