/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராஜகோபுர பணிக்கு அடிக்கல் நாகாலாந்து கவர்னர் பங்கேற்பு
/
ராஜகோபுர பணிக்கு அடிக்கல் நாகாலாந்து கவர்னர் பங்கேற்பு
ராஜகோபுர பணிக்கு அடிக்கல் நாகாலாந்து கவர்னர் பங்கேற்பு
ராஜகோபுர பணிக்கு அடிக்கல் நாகாலாந்து கவர்னர் பங்கேற்பு
ADDED : ஜூலை 10, 2025 12:21 AM

வளசரவாக்கம்,வளசரவாக்கத்தில் லட்சுமி விநாயகர் மற்றும் காரியசித்தி ஆஞ்சநேயர் கோவிலில், ராஜகோபுரம் அமைக்கும் பணிக்கு, நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் அடிக்கல் நாட்டினார்.
வளசரவாக்கம் காமகோடி நகரில், லட்சுமி விநாயகர் மற்றும் காரியசித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் சாலை மட்டத்தில் இருந்து 5 அடி பள்ளத்தில் இருந்தது.
இதையடுத்து, கோவிலின் சேதப்பகுதியை மட்டும் அகற்றி, 5 அடி உயர்த்தி கருங்கற்களால் கோவில் அமைக்கும் திருப்பணி நடந்து வருகிறது.
அறநிலையத்துறை மேற்பார்வையில், காமகோடி நகர் பக்த ஜெனசபா தலைமையில், 3 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், ராஜகோபுரம் அமைக்கும் பணிக்காக, நேற்று பாலாலயம் நடந்தது. இதில், நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பங்கேற்று, அடிக்கல் நாட்டினார்.