ADDED : ஜன 19, 2024 12:28 AM

சென்னை, சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள, பிரபல நந்தனா பேலஸ் உணவகத்தின் சென்னை கிளையில், உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இது குறித்து, உணவகத்தின் நிர்வாக இயக்குனர் கூறியதாவது:
உலகத்தரம் வாய்ந்த உணவு வழங்குவதில், எங்கள் உணவகம் தனி முத்திரை பதித்துள்ளது.
பொங்கல் தினத்தை முன்னிட்டு, 13 முதல் 21ம் தேதி வரை சென்னை சிறுசேரி, வேளச்சேரி, குரோம்பேட்டை கிளைகளில், உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. மதிய உணவில் தினமும் ஒரு சிறப்பு 'மெனு' வழங்கப்படும்.
கரும்புச்சாறுடன் கேரட், தேங்காய், அன்னாசிப்பழம் போளி வகைகள், ரவா, பேசின் லட்டு, கோசாம்பி வழங்கப்படும்.
மேலும் அரிசி பொங்கல், வெல்லம் பொங்கல், சேமியா ட்ரை புரூட், பாசி பருப்பு பாயசம் என, தினமும் ஒரு இனிப்பு வகைகள், வாழை இலையில் பரிமாறப்படும்.
இந்த உணவு, சென்னை வாடிக்கையாளர்களுக்கு ஆந்திரா உணவு வகைகளுடன் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

