UPDATED : நவ 21, 2026 05:32 PM
ADDED : நவ 21, 2026 05:26 PM

சென்னை: மேகாலயா மாநிலத்தில் நடந்த தேசிய சீனியர் வில்வித்தை போட்டியில், சென்னை வீராங்கனை மதுர வர்ஷினி, 21, வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
இந்திய வில்வித்தை சங்கம் சார்பில், இருபாலருக்குமான சீனியர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி, மேகாலயாவின் சிலாங்க் பகுதியில் நடந்தது.
பல மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் போட்டியிட்டனர். இதில் 'ரீகர்ர்வ், காம்பவுன்ட், இந்தியன்' என, மூன்று பிரிவில் போட்டிகள் நடந்தன.
தமிழகம் சார்பில், ஒவ்வொரு பிரிவிலும் எட்டு பேர் என 24 பேர் போட்டியிட்டனர். இதன் பெண்கள் காம்பவுன்ட் பிரிவில், சென்னையைச் சேர்ந்த மதுரவர்ஷினி 21, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.
இறுதி போட்டியில் அவர், தெலுங்கானாவின் தனிப்பார்த்தி சிகிச்சீதா, 21, என்பவரிடம் தோல்வியை தழுவி இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். தமிழக அணியில் மதுரவர்ஷினி மட்டுமே பதக்கம் வென்றுள்ளார்.
