/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய 'பீச் வாலிபால்' போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை அசத்தல்
/
தேசிய 'பீச் வாலிபால்' போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை அசத்தல்
தேசிய 'பீச் வாலிபால்' போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை அசத்தல்
தேசிய 'பீச் வாலிபால்' போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை அசத்தல்
ADDED : பிப் 27, 2026 05:33 AM

சென்னை: தேசிய பீச் வாலிபால் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி அசத்தலாக விளையாடி பரிசுகளை வென்றது.
ஹிந்துஸ்தான் பல்கலை சார்பில், இருபாலருக்குமான அகில இந்திய அளவிலான பீச் வாலிபால் போட்டி, பல்கலை வளாகத்தில் நடந்தது. இதில், நாட்டின் 21 பல்கலை அணிகள் போட்டியிட்டன.
போட்டி லீக் முறையில் நடந்தது. இதன் மாணவர்கள் பிரிவில் முதல் லீக் போட்டியில் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, ஹிந்துஸ்தான் பல்கலை அணியை 21 - 11, 21 - 10 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. அடுத்த போட்டியில் கோவை கற்பகம் பல்கலை அணியை 21 - 15, 27 - 29, 15 - 6 என்ற புள்ளிகளில் வென்றது. போட்டிகள் முடிவில் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், ஹிந்துஸ்தான் பல்கலை அணி இரண்டாவது இடத்தையும், பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் பல்கலை அணி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
மாணவியருக்கான பிரிவில், தமிழ்நாடு உடற்கல்வி பல்கலை அணி முதல் இடத்தையும், சென்னை விநாயகா மிஷன் பல்கலை அணி இரண்டாவது இடத்தையும், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

