ADDED : பிப் 18, 2025 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை
புழல் - அம்பத்துார் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலை, இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி இருளில் மூழ்குகிறது. அதேபோல் எம்.ஜி.ஆர்., நகர் அருகே ரெட்டேரி சந்திப்பிலும், அணுகு சாலை கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. மேலும், செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பிலும், பல மாதமாக உயர்கோபுர மின் விளக்கு எரியாமல் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
இது குறித்து போக்குவரத்து போலீசார் புகார் செய்தும், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

