/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய சப் - ஜூனியர் வாள்வீச்சு சென்னை மாணவர்கள் அசத்தல்
/
தேசிய சப் - ஜூனியர் வாள்வீச்சு சென்னை மாணவர்கள் அசத்தல்
தேசிய சப் - ஜூனியர் வாள்வீச்சு சென்னை மாணவர்கள் அசத்தல்
தேசிய சப் - ஜூனியர் வாள்வீச்சு சென்னை மாணவர்கள் அசத்தல்
ADDED : நவ 29, 2025 03:31 AM

சென்னை: மணிப்பூர் மாநிலத்தில் நடந்த தேசிய சப் - ஜூனியர் வாள்வீச்சு போட்டியில், சென்னை எஸ்.டி.ஏ.டி., மாணவர்கள், வெண்கல பதக்கத்தை கைப்பற்றினர்.
இந்திய வாள்வீச்சு சங்கம் சார்பில், தேசிய சப் - ஜூனியர் வாள்வீச்சு போட்டி, மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடந்தது. இதில், அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த, 100-க்கும் அதிகமான வாள்வீச்சு வீரர்கள் பங்கேற்றனர்.
அந்த வகையில், ஆடவர் குழு பிரிவில், தமிழகம் சார்பில் போட்டியிட்ட சென்னை எஸ்.டி.ஏ.டி.,யின் சச்சின், 13, ஹாசன், 13 ஆகியோர், குழு அரையிறுதி போட்டியில் பஞ்சாப் அணியிடம், 25 - 45 என்ற புள்ளியில் வீழ்ந்தாலும், வெண்கல பதக்கம் கைப்பற்றினர்.
மற்றொரு போட்டியில், தமிழகத்தின் அக் ஷன், 14, ராபின், 14 ஆகியோர் அணி, அரையிறுதி போட்டியில் மணிப்பூர் அணியிடம், 24 - 45 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தாலும், வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.