/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய மல்லர் கம்பம் போட்டியில் தமிழக மாணவ - மாணவியர் அபாரம்
/
தேசிய மல்லர் கம்பம் போட்டியில் தமிழக மாணவ - மாணவியர் அபாரம்
தேசிய மல்லர் கம்பம் போட்டியில் தமிழக மாணவ - மாணவியர் அபாரம்
தேசிய மல்லர் கம்பம் போட்டியில் தமிழக மாணவ - மாணவியர் அபாரம்
ADDED : நவ 29, 2025 03:30 AM

சென்னை: தேசிய மல்லர்கம்பம் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த மாணவ - மாணவியர் பதக்கங்கள் குவித்து அசத்தினர்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், 69வது தேசிய மல்லர்கம்பம் போட்டி, மத்திய பிரதேசத்தில் கடந்த 24ல் துவங்கி நேற்று நிறைவடைந்தது. நாடு முழுதும் இருந்து திரளான மாணவர்கள் பங்கேற்ற போட்டியில், தமிழகத்தில் இருந்து, தலா 12 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், 14 வயது மாணவியருக்கான தனிநபர் போட்டியில், தமிழக வீராங்கனை பூமிகா, 12, முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.
அதேபோல, 17 வயது பிரிவில் சஞ்சனா, 16, தரணிதரன், 17 ஆகியோர், வெண்கலம் வென்றனர். 19 வயது பிரிவில் அமிர்தேஸ்வரன், 17, தனுஷா, 17 ஆகியோர், வெண்கல பதக்கங்களை வென்று அசத்தினர்.
குழு போட்டியில், 17 வயது பிரிவில் மாணவியரில் தங்கமும், மாணவரில் வெண்கலமும் கிடைத்தது.