/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய சர்பிங்: தமிழக வீரர்கள் 'சாம்பியன்'
/
தேசிய சர்பிங்: தமிழக வீரர்கள் 'சாம்பியன்'
ADDED : செப் 23, 2025 01:37 AM

சென்னை:தேசிய அளவில் நடந்த சர்பிங் போட்டியில், தமிழகத்தின் கிஷோர் குமார், கமலினி, சோம் செதி ஆகியோர், முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
தமிழ்நாடு சர்பிங் சங்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து நடத்தும் 'கோவ் லாங் - வாட்டர் பெஸ்டிவல் 2025' எனப்படும், கடற்சார் விளையாட்டு போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் நடந்தன.
இதில், தமிழகம் உட்பட பல மாநிலங் களைச் சேர்ந்த ஆண்கள் பிரிவில் 53 பேரும், பெண்கள் பிரிவில் 19 பேரும் பங்கேற்றனர்.
போட்டி, 16 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் ஓப்பன் என, இரண்டு பிரிவுகளாக நடந்தன.
இதில் சிறப்பாக விளையாடிய தமிழக அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில், ஆண்கள் ஓப்பன் பிரிவில் விளையாடிய கோவளத்தைச் சேர்ந்த கிஷோர்குமார் 12.17 புள்ளி பெற்றார். பெண்கள் ஓப்பன் பிரிவில், மாமல்லபுரத்தைச் சேர்ந்த கமலினி 13.50 புள்ளிகள் பெற்றார்.
தொடர்ந்து நடந்த 16 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில், சென்னையைச் சேர்ந்த சோம் செதி 13.17 புள்ளியும், பெண்கள் பிரிவில் கமலினி 14.83 புள்ளிகளுடன் 'சாம்பியன்' பட்டங்களை வென்றனர்.
இந்த போட்டியின் 16 வயதுக்கு உட்பட்டோர் டிவிஷன் பிரிவில் மாமல்லபுரத்தைச் சேர்ந்த ஹரிஷ் அதிக புள்ளிகளை பெற்று, அந்த பிரிவின் ஓவர்ஆல் 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றினார்.