/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய மகளிர் கால்பந்து; சேது எப்.சி., அணி அசத்தல்
/
தேசிய மகளிர் கால்பந்து; சேது எப்.சி., அணி அசத்தல்
தேசிய மகளிர் கால்பந்து; சேது எப்.சி., அணி அசத்தல்
தேசிய மகளிர் கால்பந்து; சேது எப்.சி., அணி அசத்தல்
ADDED : டிச 31, 2025 05:11 AM

சென்னை: இந்திய கால்பந்து கூட்ட மைப்பு சார்பில் மகளிருக்கான ஐ.டபிள்யு.யு., எனும் தேசிய கால்பந்து போட்டி, கொல்கட்டாவில் நடக்கிறது.
இதில், நாட்டின் சிறந்த எட்டு அணிகள் போட்டியிடு கின்றன. தமிழகத்தின் சார்பில் மதுரை சேது எப்.சி., அணி இடம் பிடித்துள்ளது.
நேற்று நடந்த முதல் போட்டியில் தமிழகத்தின் சேது எப்.சி., அணி, மேற்கு வங்கத்தின் ஸ்ரீபூமி அணியை எதிர்த்து மோதியது. 10வது நிமிடத்தில் பார்வர்ட் திசையில் விரைந்த சேது அணியின் லிண்டா, எதிர் அணியின் தடுப்பை உடைத்து முதல் கோலை அடித்து அசத்தினார். தொடர்ந்து, 18வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார்.
போட்டியின் முதல் பாதியில் சேது அணி 2 - 0 கோல் என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதி துவங்கிய முதல் நிமிடத்தில், அதாவது போட்டியின் 46வது நிமிடத்தில் சேது அணிக்கு கூடுதல் பலமாக நட்சத்திர வீராங்கனை அபிகேல் ஒரு கோல் அடித்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் ஸ்ரீபூமி அணியின் கரிஷ்மா 50 மற்றும் 87வது நிமிடங்களில், தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்தார். இதனால், 3 - 2 என்ற கோல் கணக்கில் போட்டி சூடு பிடித்தது.
போட்டியின் 90 நிமிடங் கள் முடிந்த நிலையில் கூடுத லாக 5 நிமிடம் வழங்கப்பட்டது. அதில் சேது அணியின் லிண்டா, 94வது நிமிடத்தில், அணிக்காக மேலும் ஒரு கோலை அடித்தார்.
போட்டி முடிவில் 4 - 2 என்ற கோல் கணக்கில் சேது அணி வெற்றி பெற்று, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

