/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஆர்.எம்., விளையாட்டு இயக்குநருக்கு சிறப்பு விருது
/
எஸ்.ஆர்.எம்., விளையாட்டு இயக்குநருக்கு சிறப்பு விருது
எஸ்.ஆர்.எம்., விளையாட்டு இயக்குநருக்கு சிறப்பு விருது
எஸ்.ஆர்.எம்., விளையாட்டு இயக்குநருக்கு சிறப்பு விருது
ADDED : டிச 31, 2025 05:10 AM

சென்னை: நடப்பாண்டில், விளையாட்டு துறையில் சாதித்த ஆளுமைக்கான சிறப்பு விருது சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை விளையாட்டு துறை இயக்குநர் மோகன கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
இந்திய உடற்கல்வி அறக்கட்டளையின் தமிழ்நாடு கிளை சார்பில், விளையாட்டு துறையில் நடப்பாண்டில் சிறந்து விளங்கியோருக்கான விருதுகள்' வழங்கும் விழா, திருச்சியில் நடந்தது.
இந்த விழாவில், விளையாட்டுத் துறையில் சாதித்த ஆளுமைகளுக்கு 29 பிரிவுகளில் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், 'விளை யாட்டுத்துறையில் தலைமை மற்றும் நிர்வாகத்தில் சிறந்த பங்களிப்பிற்கான உயரிய விருது' சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையின் விளையாட்டுத் துறை இயக்குநர் பேராசிரியர் மோகன கிருஷ்ணனுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருதை நடிகர் கமல் மற்றும் அமைச்சர் மகேஷ் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
விளையாட்டுத் துறையில் அவர் ஆற்றிய நீண்டகால சேவையைப் பாராட்டி, இந்த விருது வழங்கப்பட்டது.

