/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 2ல் நவராத்திரி துவக்கம்
/
காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 2ல் நவராத்திரி துவக்கம்
காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 2ல் நவராத்திரி துவக்கம்
காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 2ல் நவராத்திரி துவக்கம்
ADDED : செப் 29, 2024 12:29 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், புரட்டாசி மாதத்தில், ஸ்ரீதேவி நவராத்திரி விழா, 10 நாட்கள் விமரிசையாக நடக்கும்.
அதன்படி, நடப்பாண்டிற்கான நவராத்திரி விழா, அக்., 2ம் தேதி காலை பூர்வாங்க சண்டி ஹோமத்துடன் துவங்குகிறது.
உற்சவத்தையொட்டி தினமும் காலை காமாட்சி அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடக்கிறது.
இரவில், நவராத்திரி மண்டபத்தில் விசேஷ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள்கிறார். இரவு 7:30 மணிக்கு, பிரபல சங்கீத வித்வான்களின் சங்கீத கச்சேரியும் நடக்க உள்ளது.
விழாவின் எட்டாம் நாளான அக்., 10ல், இரவு, துர்காஷ்டமி, துர்க்கை புறப்பாடு, சூரசம்ஹார பூர்த்தியும், 11ல் சரஸ்வதி பூஜையும், 12ல் விஜயதசமி, நவாவர்ணம் பூர்த்தியும் நடக்க உள்ளது.
வரும் 13ல் இரவு ஸஹஸ்ர கலஸ ஸ்தாபனமும், நவராத்திரி உற்சவம் நிறைவு நாளான அக்., 14ல் காலை ஸஹஸ்ர கலசாபிஷேகமும், இரவு ஊஞ்சல் புஷ்ப கைங்கர்யமும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் - நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசன் மற்றும் கோவில் நிர்வாகம் செய்கிறது.