/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை மாணவர்களுக்கு நேரு பிறந்தநாள் பேச்சு போட்டி
/
சென்னை மாணவர்களுக்கு நேரு பிறந்தநாள் பேச்சு போட்டி
சென்னை மாணவர்களுக்கு நேரு பிறந்தநாள் பேச்சு போட்டி
சென்னை மாணவர்களுக்கு நேரு பிறந்தநாள் பேச்சு போட்டி
ADDED : நவ 11, 2024 01:29 AM
சென்னை:மறைந்த முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளையொட்டி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், நாளை மற்றும் நாளை மறுதினம், பேச்சுப் போட்டி நடக்க உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு, நாளை வடசென்னை அளவில் வில்லிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி; தென்சென்னை அளவில் நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி; மத்திய சென்னை அளவில் திருவல்லிக்கேணி, சீமாட்டி விலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில், காலை 9:00 மணிக்கு போட்டிகள் நடக்க உள்ளன.
கல்லுாரி மாணவர்களுக்கு, 13ம் தேதி, வடசென்னை அளவில் ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி; மத்திய சென்னை அளவில் சேப்பாக்கம் மாநிலக் கல்லுாரி; தென்சென்னை அளவில் ராணி மேரி கல்லுாரி ஆகியவற்றில், காலை 9:00 மணிக்கு போட்டிகள் நடக்கும்.
போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கான போட்டியில், முதல் மூன்று பரிசுகள் மட்டுமின்றி, அரசு பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு, சிறப்பு பரிசாக தலா 2,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள்,'அமைதி புறா நேரு, நவீன இந்தியாவின் சிற்பி, ஆசிய ஜோதி' ஆகிய தலைப்புகளில் ஒன்றை தேர்வு செய்து பேசலாம். கல்லுாரி மாணவர்கள், 'நேருவின் வெளியுறவுக் கொள்கை, நேரு கட்டமைத்த இந்தியா, நேருவின் பஞ்சசீலக் கொள்கை' ஆகியவற்றில் ஒரு தலைப்பை தேர்வு செய்து பேசலாம்.