/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிகளுக்கான ' டி20 ' கிரிக்கெட் நெல்லை நாடார் அணி சாம்பியன்
/
பள்ளிகளுக்கான ' டி20 ' கிரிக்கெட் நெல்லை நாடார் அணி சாம்பியன்
பள்ளிகளுக்கான ' டி20 ' கிரிக்கெட் நெல்லை நாடார் அணி சாம்பியன்
பள்ளிகளுக்கான ' டி20 ' கிரிக்கெட் நெல்லை நாடார் அணி சாம்பியன்
ADDED : நவ 16, 2025 02:56 AM

சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில், நெல்லை நாடார் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
எம்.சி.சி., -- எம்.ஆர்.எப்., நிறுவனங்கள் இணைந்து, சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான 'டி20' கிரிக்கெட் போட்டியை, சேத்துப்பட்டில் நடத்தியது.
இதன் இறுதிப்போட்டியில், கொட்டிவாக்கம் நெல்லை நாடார் பள்ளி மற்றும் நுங்கம்பாக்கம் பி.எஸ்.பி.பி., அணிகள் தகுதி பெற்றன. நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற நெல்லை நாடார் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. கிரிஷ் 78, ஜிஸ்னு 35, ஹாசன் 64 ரன்கள் அடித்தனர்.
கடினமான இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய பி.எஸ்.பி.பி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே அடித்தது. பி.எஸ்.பி.பி சார்பில் ரிஷப் மல்ஹோத்ரா 41 ரன் அடித்து ஆறுதல் தந்தார்.
போட்டியில், 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை நாடார் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.