/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரத்த தானம் செய்வோருக்கு வி.எச்.எஸ்., மருத்துவமனை கவுரவம்
/
ரத்த தானம் செய்வோருக்கு வி.எச்.எஸ்., மருத்துவமனை கவுரவம்
ரத்த தானம் செய்வோருக்கு வி.எச்.எஸ்., மருத்துவமனை கவுரவம்
ரத்த தானம் செய்வோருக்கு வி.எச்.எஸ்., மருத்துவமனை கவுரவம்
ADDED : நவ 16, 2025 02:56 AM

தி.நகர்: வி.எச்.எஸ்., மருத்துவமனை ரத்த வங்கி சார்பில், ரத்த தானம் செய்வோர் மற்றும் நன்கொடையாளர் அமைப்பினர் கவுரவிக்கப்பட்டனர்.
தரமணியில் உள்ள வி.எச்.எஸ்., எனும் வாலண்டரி ஹெல்த் சர்வீசஸ் மருத்துவமனையில், ரத்த வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியின் நிறுவனரான, டாக்டர் ஜெ.பாலசுப்பிரமணியம் என்பவரின் நான்காம் ஆண்டு நினைவு விழா மற்றும் ரத்த தானம் செய்வோர் மற்றும் நன்கொடையாளர் அமைப்புகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி, தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது.
நிகழ்வில், தலசீமியா நலச்சங்கம் தலைவர் டாக்டர் ரேவதி ராஜ், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில், டாக்டர் ஜெ.பாலசுப்பிரமணியம் மனைவி பாமா கவுரவிக்கப்பட்டார்.
மேலும், ரத்த தானம் குறித்து, ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மாணவர்களின் கச்சேரி மற்றும் 'கலக்கப்போவது யார்' பிரபலங்கள் முல்லை மற்றும் கோதண்டம் ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடந்தது. அத்துடன், ரத்த தானம் செய்வோர், நன்கொடையாளர் என 100க்கும் மேற்பட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.

