/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமியாரை கல்லால் அடித்த மருமகன் கைது
/
மாமியாரை கல்லால் அடித்த மருமகன் கைது
ADDED : பிப் 18, 2025 12:19 AM
மதுரவாயல்: மதுரவாயலை சேர்ந்தவர் பிரியா, 40. இவரது மகள் கீர்த்திகாவிற்கு, ஜெயசீலன், 31, என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஜெயசீலன் அடிக்கடி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்ததால் கீர்த்திகா, மூன்று ஆண்டுகளாக தன் தாயுடன் வசித்து வந்தார்.
கடந்த 13 ம் தேதி பிரியா வீட்டிற்கு சென்ற ஜெயசீலன், மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி தகராறு செய்தார். அதற்கு, தனியாக வீடு பார்த்த பின், மகளை அனுப்பி வைப்பதாக கூறியதால், மாமியாருக்கும், மருமகனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஜெயசீலன், கீழே இருந்த கல்லை எடுத்து மாமியார் பிரியாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பினார். காயமடைந்த பிரியா அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து, விசாரித்த மதுரவாயல் போலீசார், மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஜெயசீலனை, நேற்று கைது செய்தனர்.