ADDED : அக் 27, 2026 09:39 PM
அ நிறம் | அளவு
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை, நேதாஜி நகர் ஆறாவது தெருவில், சென்னை மாநகராட்சி நிதியில் இருந்து, 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தின் ‘அமுதம்’ ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது.
இதை, உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன், நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். புதிய ரேஷன் கடையில், 956 ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
