/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார ரயில்கள் புதிய கால அட்டவணை நாளை அமல்: 24 ரயில்கள் நேரம் மாற்றம்
/
மின்சார ரயில்கள் புதிய கால அட்டவணை நாளை அமல்: 24 ரயில்கள் நேரம் மாற்றம்
மின்சார ரயில்கள் புதிய கால அட்டவணை நாளை அமல்: 24 ரயில்கள் நேரம் மாற்றம்
மின்சார ரயில்கள் புதிய கால அட்டவணை நாளை அமல்: 24 ரயில்கள் நேரம் மாற்றம்
ADDED : ஜன 01, 2025 12:45 AM
சென்னை,
சென்னை புறநகர் மின்சார ரயில்களின் புதிய கால அட்டவணை, நாளை முதல் அமலாகிறது. இதில், 24 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதேநேரம், தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை, இன்று முதல் அமலாகிறது.
இதையடுத்து, பயணியர் வசதிக்காகவும், இயக்க காரணங்களுக்காகவும், சென்னை ரயில்வே கோட்டத்தில் சில மார்க்கங்களில், புறநகர் மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் - திருத்தணி மார்க்கம், சென்னை கடற்கரை - - செங்கல்பட்டு மார்க்கம் உள்ளிட்ட மார்க்கங்களில், குறிப்பிட்ட சில ரயில்களின் நேரம் மாற்றம், ரயில் எண்கள் மாற்றம் செய்யப்பட உள்ளன.
இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வார நாட்களில் மட்டுமே, இந்த நேர மாற்றம் இருக்கும்.
சென்னை சென்ட்ரல் --திருத்தணி, சென்னை கடற்கரை - - ஆவடி, சென்ட்ரல் -- அரக்கோணம், சென்ட்ரல் -- பட்டாபிராம், திருத்தணி -சென்ட்ரல், கடற்கரை - செங்கல்பட்டு, ஆவடி -சூலுார்பேட்டை வழித்தடத்தில், 24 ரயில்களின் நேரத்தில், 5 முதல் 10 நிமிடங்கள் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, சென்னை ரயில் கோட்டம் நேற்று தெரிவித்துள்ளது.
ஏமாற்றம்
இந்த புதிய கால அட்டவணையில், கூடுதல் மின்சார ரயில்கள், புதியவிரைவு மின்சார ரயில்கள், ஏற்கனவே நிறுத்தப்பட்ட நள்ளிரவு ரயில்கள் மீண்டும் இயக்குவது போன்ற அறிவிப்புகள் இல்லாதது, பயணியரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

