ADDED : அக் 07, 2025 12:42 AM

அம்மன் கழுத்தில்
மாங்கல்யம் திருட்டு
ஆவடி: முத்தாபுதுப்பேட்டை, ஆலத்துார் பகுதியில் உள்ள தும்ப காளி அம்மன் கோவில் பூசாரி சிவகுமார், 48. இவர், நேற்று காலை 6:00 மணி அளவில், கோவிலை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே செ ன்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் மாங்கல்யம், இரண்டு உண்டியல் திருடு போனது தெரிந்தது.
வீடு புகுந்து
திருடியவர் கைது
அம்பத்துார்: சூரப்பட்டு, சிவபிரகாசம் நகரைச் சேர்ந்தவர் ஜீன் யூரட், 46; இசை கலைஞர். கடந்த மாதம், 20ம் தேதி இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது. விசாரித்த புதுார் போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஆவடி, நந்தவன மேட்டூரைச் சேர்ந்த அகில், 22, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
மொபைல் போன்
திருடிய 4 பேர் கைது
சென்னை: முகலிவாக்கத்தை ச் சேர்ந்தவர் ஜீவா, 48; தனியார் நிறுவன பொறியாளர். கடந்த 1ம் தேதி ராயப்பேட்டை, ஜி.பி., சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடையில் மது வாங்கி திரும்பும்போது, அவரது மொபைல் போன் திருட்டு போனது. அண்ணா சாலை போலீசார் விசாரித்து, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கிரிதரன், 24, சரவணன், 24, ரஞ்சித், 33, வினோத், 27 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.