/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஒன்பது சிறுவர்கள் மீட்பு: மூவர் கைது
/
கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஒன்பது சிறுவர்கள் மீட்பு: மூவர் கைது
கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஒன்பது சிறுவர்கள் மீட்பு: மூவர் கைது
கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஒன்பது சிறுவர்கள் மீட்பு: மூவர் கைது
ADDED : மார் 27, 2025 11:54 PM

சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பீஹார் மாநிலம் சாப்ராவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு விரைவு ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணியரை, போலீசார் கண்காணித்த போது, ஒன்பது சிறுவர்களை மூன்று பேர் அழைத்து சென்றனர். அவர்கள் மீது, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, மூன்று பேரையும் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
விசாரணையில், இந்த சிறுவர்களை பீஹாரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து, இங்குள்ள கடைகள், கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்த இருந்தது தெரியவந்தது.
இதற்கிடையே, சிறார்களை அழைத்து வந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்தர் ராவத் 50, அஜய்குமார் 28, உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ் ராஜ்பார் 21, ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் எந்தெந்த மாநிலத்துக்கு ஆட்கள் தேவைப்படுகிறதோ, அந்தந்த மாநிலத்துக்கு சிறுவர்களை அனுப்பி வைப்பதும், விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட ஒன்பது சிறுவர்களை ராயபுரத்தில் உள்ள அரசு தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.

