/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலாவதியான இட்லி மாவு விற்பனை ஆன்லைன் நிறுவனத்திற்கு 'நோட்டீஸ்'
/
காலாவதியான இட்லி மாவு விற்பனை ஆன்லைன் நிறுவனத்திற்கு 'நோட்டீஸ்'
காலாவதியான இட்லி மாவு விற்பனை ஆன்லைன் நிறுவனத்திற்கு 'நோட்டீஸ்'
காலாவதியான இட்லி மாவு விற்பனை ஆன்லைன் நிறுவனத்திற்கு 'நோட்டீஸ்'
ADDED : நவ 25, 2025 04:54 AM
சென்னை: காலாவதியான இட்லி மாவை ஆன்லைனில் விற்பனை செய்த நிறுவனத்திற்கு, தமிழக உணவு பாதுகாப்பு துறை 'நோட்டீஸ்' வழங்கியுள்ளது.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜாராமன் என்பவர், 'பிளிங்கிட்' என்ற ஆன்லைன் நிறுவனத்தில் இட்லி மாவு ஆர்டர் செய்தார். அந்த மாவை வாங்கி பயன்படுத்தியப்போது காலாவதியான மாவு என தெரிய வந்தது.
அந்நபர் உடனடியாக, விருகம்பாக்கத்தில் உள்ள அந்நிறுவன கிடங்கிற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு உரிய பதில் தராததால், உணவு பாதுகாப்பு துறையில் அந்நபர் புகார் அளித்தார்.
உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ததில், அந்நிறுவன கிடங்கில், காலாவதி பொருட்கள் இருந்ததுடன், சுகாதாரமாக பராமரிக்கப்படாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்நிறுவனத்திற்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து, 15 நாட்களில் விளக்கமளிக்க, ஆன்லைன் நிறுவனத்திற்கு, தமிழக உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், 'காலாவதியான பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதுடன், நிறுவனம் துாய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்.
'தேவையற்ற பொருட்களை உடனுக்குடன் அகற்றுவதுடன், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ சான்றிதழ் மற்றும் தடுப்பூசி செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

