/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லஞ்சம் கேட்ட அதிகாரிகள்? வீடியோ வெளியாகி சலசலப்பு
/
லஞ்சம் கேட்ட அதிகாரிகள்? வீடியோ வெளியாகி சலசலப்பு
ADDED : பிப் 15, 2024 12:50 AM
முகப்பேர் அம்பத்துார் அடுத்த முகப்பேர் கிழக்கு பகுதியில் பாபுசிங், 36, என்பவர் 'பிளாஸ்டிக்' மற்றும் 'எசன்ஸ் பொருள்' கடை நடத்தி வருகிறார்.
கடந்த 10ம் தேதி, இவரது கடைக்கு வந்த மூவர் 'மாசு கட்டுப்பாட்டு துறையில் இருந்து வருகிறோம்' எனக் கூறி, தலா 1,000 என, 3,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர்.
பாபுசிங் லஞ்சம் கொடுக்க மறுத்ததால், கடைக்கு 'சீல்' வைக்கப்படும் என, மூவரும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது ஒருபுறம் இருக்க, அம்பத்துார் மண்டல அதிகாரிகள், எந்த முன்னறிவிப்பும் இன்றி பாபு சிங்கின் கடையை பூட்டி, 'சீல்' வைத்தனர்.
இது குறித்து கேட்டபோது, 'தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் இருந்ததால், கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது' என தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'புகார் ஏதும் வராமல், இந்த பிரச்னையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
அதேபோல, லஞ்சம் கேட்டு வந்த மூவரும் எங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் இல்லை' எனக் கூறியுள்ளனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

