/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரும்பாக்கத்தில் பல ஆயிரம் பேர் ஓட்டுரிமை பறிபோகும் அபாயம் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் அலுவலர்கள்
/
பெரும்பாக்கத்தில் பல ஆயிரம் பேர் ஓட்டுரிமை பறிபோகும் அபாயம் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் அலுவலர்கள்
பெரும்பாக்கத்தில் பல ஆயிரம் பேர் ஓட்டுரிமை பறிபோகும் அபாயம் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் அலுவலர்கள்
பெரும்பாக்கத்தில் பல ஆயிரம் பேர் ஓட்டுரிமை பறிபோகும் அபாயம் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் அலுவலர்கள்
ADDED : நவ 16, 2025 02:58 AM

சென்னை: ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ள நிலையில், பெரும்பாக்கம் வாரிய குடியிருப்பில் நேற்று, மேஜை போட்டு ஒரே இடத்தில் அமர்ந்து, தங்கள் பணியை 'சிறப்பாக' செய்தனர்.
வாக்காளர் அடையாள அட்டை குளறுபடியால், லோக்சபா தேர்தலில் பல ஆயிரம் பேர் ஓட்டளிக்காத நிலையில், தற்போதைய எஸ்.ஐ.ஆர்., பதிவு குளறுபடி, மேலும் சிக்கலை ஏற்படுத்துவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆர்வ ம் இல்ல ை சென்னை முழுதும், எஸ்.ஐ.ஆர்., எனும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடந்து வருகிறது. பெரும்பாக்கம் ஊராட்சி, 11, 12வது வார்டுகளில் உள்ளது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், இந்த பணி நேற்று நடந்தது.
இங்குள்ள, 25,000க்கும் மேற்பட்ட வீடுகளில், 50,000 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதற்கு, ஓட்டுச்சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள், ஊராட்சி ஊழியர்கள் என, 25க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள், ஒவ்வொரு வீடாக சென்று, எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கி, படிப்பறிவு இல்லாத அவர்களிடம் தகவல் சேகரித்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஆனால், குடியிருப்பின் ஓரிடத்தில் டேபிள் மற்றும் இருக்கைகள் போட்டு அமர்ந்து கொண்டு, அங்குள்ளோரை வரச்சொல்லி, விண்ணப்பம் கொடுத்து, பூர்த்தி செய்தனர்.
அன்றாட கூலி வேலைக்கு செல்வோரால், அவர்கள் சொல்லும் நேரத்திற்கு செல்ல முடியாமல் விட்டுவிடுகின்றனர். அதனால், எஸ்.ஐ.ஆர்., பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில், 50,000 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், 18,000 பேருக்கு ஒட்டுரிமை உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், 7,000 பேர் மட்டுமே ஓட்டளித்தனர்.
வாக்காளர் பட்டியல் குளறுபடிதான் காரணம். தற்போது மேற்கொள்ளும் அரைகுறை எஸ்.ஐ.ஆர்., பணியால், மேலும் ஆயிரக்கணக்கானோரின் ஓட்டுரிமை பாதிக்கும் அபாயம் உள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குளறுபடி இதுகுறித்து, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கூறியதாவது:
குடியிருப்பில் உள்ளவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், அவர்களை அடையாளம் காண சிரமமாக உள்ளது.
இதனால், மேஜை போட்டு அமர்ந்திருக்கிறோம். எந்த பிளாக்கில், எந்த வாக்காளர்கள் உள்ளனர், பிளாக் எங்கெல்லாம் உள்ளது என, சமுதாய வளர்ச்சி பிரிவு ஊழியர்களுக்கு தெரியும். அவர்கள் எங்களுக்கு உதவ முன்வரவில்லை.
எனவே, நலச்சங்கம் வாரியாக பேசியும், வாக்காளர்கள் ஆர்வமாக வரவில்லை. சில கட்சியினர் உதவினாலும், முழுமையாக பங்கேற்பு இல்லை. வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள குளறுபடிகளை, எஸ்.ஐ.ஆர்., வாயிலாக நீக்க முடியும். இதற்கு, மக்கள் ஒத்துழைப்பு தேவை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, சமுதாய வளர்ச்சி பிரிவு ஊழியர்கள் ஒத்துழைக்கவில்லை என புகார் வந்துள்ளது.
'விசாரித்து வருகிறோம். எஸ்.ஐ.ஆர்., பணியை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

