ADDED : ஜன 23, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, மின்வாரியத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக, பணம் மோசடி செய்தவர்களில் ஒருவர் கைதானார்.
சென்னை ஆவடியை சேர்ந்த சிலரிடம், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், மின் வாரியத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி, 1 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றினார்.
பணம் கொடுத்தவர்கள், ஆவடி போலீஸ் கமிஷனரக மத்திய குற்றப் பிரிவில் புகார் செய்தனர்.
இது குறித்து விசாரித்த போலீசார், கார்த்திகேயனின் கூட்டாளியான அருள்ஜோதி, 45, என்பவரை, நேற்று மாலை கைது செய்தனர்.

