/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.டி.சி., மாதாந்திர அட்டை 24 வரை வாங்க வாய்ப்பு
/
எம்.டி.சி., மாதாந்திர அட்டை 24 வரை வாங்க வாய்ப்பு
ADDED : அக் 19, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மாநகர போக்குவரத்து கழகத்தில் வழங்கப்படும் மாதாந்திர பயண அட்டையை வரும் 24ம் தேதி வரை பெறலாம்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை:
மாநகர் போக்குவரத்து கழகத்தில், அக்., 16 முதல் நவ., 15ம் தேதி வரை செல்லத்தக்க, விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய 1,000, 2,000 ரூபாய் மதிப்பிலான மாதாந்திர பயண அட்டை, மாணவர் சலுகை பயண அட்டைகள், அனைத்து டிக்கெட் விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை, தொடர் விடுமுறையால் 17ல் இருந்து 22ம் தேதி வரை விற்கப்படும் பயணியரின் மாதாந்திர பயண அட்டையை, 23, 24ம் தேதி வரை வாங்கி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.