
சென்னை எப்.சி.,க்கு புது பயிற்சியாளர்
சென்னையின் எப்.சி., கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த காயில் என்பவர், நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடால் நீக்கப்பட்டார்.
இவருக்கு பதிலாக, கிளிபோர்ட் மிராண்டா என்பவர், புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முக்கியமான தொடர்கள் மற்றும் போட்டிகளில் சென்னை எப்.சி., அணி பெரியளவில் ஜொலிக்கவில்லை. அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு கிடக்கும் அணி, புதிய பாதையில் சென்று வெற்றியை தீர்மானிக்குமா என்பது நாளடைவில் தெரியும்.
--
'
புக் செல்லர்' அணி கிரிக்கெட்டில் வெற்றி
சென்னையில் நடக்கும் 4வது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், புக் செல்லர் அணியை எதிர்த்து பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கிளப் அணி மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாரத் பெட்ரோலியம் அணி, 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணி வீரர்கள் ஜெரேமியா ஆலன் மார்கஸ் மற்றும் அபிமான் சுந்தர், தலா ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அடுத்து களமிறங்கிய புக் செல்லர் அணி, 34.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பில் 124 ரன்கள் எடுத்து, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாரத் அணி சார்பில் ஷர்வின் 5 விக்கெட் எடுத்தார்.