/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவத்தில் தடையின்றி நீரோட்டம் தீவிரமாக கண்காணிக்க உத்தரவு
/
கூவத்தில் தடையின்றி நீரோட்டம் தீவிரமாக கண்காணிக்க உத்தரவு
கூவத்தில் தடையின்றி நீரோட்டம் தீவிரமாக கண்காணிக்க உத்தரவு
கூவத்தில் தடையின்றி நீரோட்டம் தீவிரமாக கண்காணிக்க உத்தரவு
ADDED : அக் 20, 2024 12:39 AM
சென்னை,அமைந்தகரை காவல் நிலையம் பின்புறம் ஓடும் கூவம் ஆற்றின் இருபுறங்களிலும், குப்பை மற்றும் கட்டட கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளதாக, கடந்த மே 9ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.
அதில், 'துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரையிலான உயர்மட்ட சாலை பணிக்காக பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்கள், கூவம் ஆற்றில் வைக்கப்பட்டுள்ளது' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.
கடந்த 3ம் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'கூவம் ஆற்றில் கட்டட கழிவுகளை அக்., 10க்குள் அகற்ற வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்படும்' என, தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அறிக்கையில், கூவம் ஆற்றில் 89 இடங்களில் கொட்டப்பட்டிருந்த கட்டுமான கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கான புகைப்படங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை ஏற்கனவே துவங்கிவிட்டது. எனவே, கூவத்தில் எந்தவிதமான உடைப்பும் இல்லாமல், தடையின்றி தண்ணீர் செல்வதை நீர்வளத் துறையும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 24ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.