/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை தினத்தை முன்னிட்டு 'நம்ம கதைகள்' குறும்பட போட்டி
/
சென்னை தினத்தை முன்னிட்டு 'நம்ம கதைகள்' குறும்பட போட்டி
சென்னை தினத்தை முன்னிட்டு 'நம்ம கதைகள்' குறும்பட போட்டி
சென்னை தினத்தை முன்னிட்டு 'நம்ம கதைகள்' குறும்பட போட்டி
ADDED : ஆக 04, 2025 02:31 AM
சென்னை:'சூப்பர் சென்னை' அமைப்பின் சார்பில் 'நம்ம கதைகள்' குறும்பட போட்டி நடத்தப்படுகிறது. முதலிடம் பிடிக்கும் படைப்பிற்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது
கிரெடாய் முன் னெடுப்பான, 'சூப்பர் சென்னை' அமைப்பு, சென்னை தினத்தை முன்னிட்டு 'நம்ம கதைகள்' என்கிற குறும்பட போட்டியை நடத்துகிறது.
சென்னை நகர வாழ்க்கை, வீதிகள், மலரும் நினைவுகள், அன்றாட நிகழ்ச்சி மற்றும் அதன் சிறப்புகள் என, பல்வேறு பிரிவுகளில் குறும்படங்களை எடுக்க 'சூப்பர் சென்னை' அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை நகரம் எப்படி பார்க்கப்படுகிறது, சென்னையின் அழகு, வசீகரம், சிறப்பு மிக்க இடங்கள், மாற்றம், பழங்கால சின்னங்கள், மறைந்திருக்கும் பொக்கிஷங்கள் மற்றும் தங்களை கவர்ந்த, சுவாரஸ்யமான, மறக்க முடியாத இடங்கள் என, பலவற்றை குறும்படங்களாக எடுத்து, ஆக., 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இதில், பொதுமக்கள், மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் என, பலதரப்பட்ட மக்களும் பங்கேற்று, மொபைல் போன் அல்லது கேமராவில் குறும்படத்தை எடுத்து அனுப்பலாம்.
குறும்படங்களை hello@superchennai.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். குறும்படம் ஐந்து நிமிடங்கள் வரை இருக்கலாம்.
சென்னை தினமான ஆக., 22ம் தேதி, சிறந்த படைப்புகள் திரையிடப்படும். அதில், முதலிடம் பிடிக்கும் குறும்படத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.