/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொங்கல் விழாவுக்கு அனுமதி மறுப்பு பச்சையப்பன் மாணவர்கள் 'அட்டகாசம்'

ADDED : ஜன 10, 2025 12:25 AM

கீழ்ப்பாக்கம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லுாரியில் நேற்று, சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
காலை 9:30 மணிக்கு விழா துவங்கிய உடன், கல்லுாரியின் பிரதான கதவு மூடப்பட்டது. 10:00 மணிக்கு மேல் தாமதமாக வந்த மாணவர்களுக்கு, விழாவில் பங்கேற்க கல்லுாரி நிர்வாகம் அனுமதி மறுத்தது.
இதனால் அதிருப்தியடைந்த மாணவர்கள், கையில் கொண்டுவந்த மாலையை பிரதான கதவின் மீது வீசி, சில நிமிடங்கள் நுழைவாயிலில் கோஷமிட்டனர்.
பின், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 'பச்சையப்பாஸ்க்கு ஜே... ஜே...' என, கோஷம் எழுப்பி பேரணியாக சென்றனர்.
அப்போது, அவ்வழியாக வந்த, பிராட்வே - கோயம்பேடு செல்லும் தடம் எண்: '15பி' மாநகர பேருந்தின் கூரை மீது ஏறி அட்டகாசம் செய்தனர்.
அதேபோல், வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அடையாள அட்டைகளை சுழற்றியபடி சாலையில் தாறுமாறாக ஓடினர். இதனால், வாகன ஓட்டிகள் பலர், விபத்து அபாயத்தில் சென்றனர்.