/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட் போலீசை தாக்கிய பயணி கைது
/
ஏர்போர்ட் போலீசை தாக்கிய பயணி கைது
ADDED : ஏப் 10, 2025 11:52 PM
சென்னை, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் சமர் தினேஷ் பாய், 50; சென்னை மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை தலைமை காவலர்.
நேற்று முன்தினம், உள்நாட்டு புறப்பாடு நுழைவாயிலில் பணியில் இருந்தார். அப்போது ஒரு பயணி, சென்னையிலிருந்து புறப்படும் பாட்னா விமானத்திற்கு செல்ல முயன்றார். தலைமை காவலர் அவரை தடுத்து, பாட்னா விமானத்திற்கான 'போர்டிங்' இன்னும் துவங்கவில்லை. அதனால் காத்திருக்கும்படி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பயணி, தகராறில் ஈடுபட்டதுடன் தலைமை காவலரை தாக்கி உள்ளார்.
இதுகுறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்ட பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது அசிம் கமல் பரூக்கி, 35, என்பவரை கைது செய்தனர்.
சென்னையில் உள்ள ஒரு கல்லுாரியில் பேராசிரியர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்று, சொந்த ஊர் செல்வதற்காக அவர் புறப்பட்டபோது, தலைமைக் காவலரை தாக்கியது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

