தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இனிப்புகளை அள்ளி சென்ற மக்கள் மேயர் பங்கேற்ற விழாவில் பரபரப்பு

இனிப்புகளை அள்ளி சென்ற மக்கள் மேயர் பங்கேற்ற விழாவில் பரபரப்பு

இனிப்புகளை அள்ளி சென்ற மக்கள் மேயர் பங்கேற்ற விழாவில் பரபரப்பு


UPDATED : நவ 01, 2026 05:47 PM

ADDED : நவ 01, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 05:47 PM ADDED : நவ 01, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வளசரவாக்கம்: நெற்குன்றம், போரூரில் பூங்கா, மருத்துவ மையத்தை மேயர் பிரியா திறந்து வைத்தார். விழாவில் வழங்கப்பட இருந்த இனிப்புகளை, மக்கள் மொத்தமாக அள்ளிச் சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வளசரவாக்கம் மண்டலம், 145வது வார்டு, நெற்குன்றம் மாதா கோவில் தெருவில், 1.75 கோடி ரூபாய் மதிப்பில் பூங்காவும், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நகர்ப்புற மருத்துவ மையமும் அமைக்கப்பட்டன. பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்த இவற்றை, மேயர் பிரியா நேற்று திறந்து வைத்தார்.

அதேபோல், 153வது வார்டு, போரூர், சக்தி நகரில் 2.05 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வார்டு அலுவலகம், அருகிலுள்ள ஆரம்ப மருத்துவ மையத்தில் 1.10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டாவது தளம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வளசரவாக்கம் மண்டலக் குழு தலைவர் ராஜன், கவுன்சிலர்கள் சத்யநாதன், சாந்தி ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நெற்குன்றத்தில் திறப்பு விழா முடிந்ததும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அப்போது, இனிப்பு வாங்க மக்கள் முண்டியடித்தனர். சிலர் இனிப்பு வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளுக்குள் கைகளை விட்டு, பெட்டிகளில் இருந்த இனிப்புகளை மொத்தமாக அள்ளிச் சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us