ADDED : ஜன 11, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, ஓட்டேரி, ஸ்ட்ரான்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் உமர், 27. தனியார் ஊழியர். இவர், நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணியளவில் வீட்டின் வெளியே உள்ள கழிப்பறைக்கு சென்று திரும்பி வருகையில், வீட்டினுள் யாரோ வந்து சென்ற தடயம் அறிந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த இரண்டு மொபைல்போன்கள் திருடு போயிருந்தன. உடனே, உமர் கூச்சலிட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் கூடி அப்பகுதியில் இருந்து தப்பியோட முயன்ற திருடனை, கையும் களவுமாக பிடித்து, ஓட்டேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வில்லிவாக்கம், அகஸ்தியர் நகர் 28வது தெருவைச் சேர்ந்த பிரகாஷ், 19, என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே நான்கு திருட்டு வழக்குகள் உள்ளன. மொபைல் போன்களை மீட்ட போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

