/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரியார் நகர் மருத்துவமனை இதய நோயாளிக்கு மறுவாழ்வு
/
பெரியார் நகர் மருத்துவமனை இதய நோயாளிக்கு மறுவாழ்வு
பெரியார் நகர் மருத்துவமனை இதய நோயாளிக்கு மறுவாழ்வு
பெரியார் நகர் மருத்துவமனை இதய நோயாளிக்கு மறுவாழ்வு
ADDED : மே 29, 2025 11:51 PM

சென்னை :கொளத்துார் பெரியார் நகர் அரசு மருத்துவமனை, 800 படுக்கை வசதிகளுடன், சமீபத்தில் உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
தற்போது, 800 படுக்கைகள், 10 அதிநவீன கருவிகள் கொண்ட அறுவை சிகிச்சை அரங்குகளும் உள்ளன.
இங்கு புதிதாக திறக்கப்பட்ட இதய சிகிச்சை பிரிவில், விநாயகபுரம், புத்தகரத்தை சேர்ந்த சேகர், 50 என்பவர் நெஞ்சுவலியால், இம்மாதம் 25ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் கே.ஹேமலதா மேற்பார்வையில், இதய சிறப்பு மருத்துவர்கள் குழு, 26ம் தேதி வெற்றிகரமாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து, அடைப்பு நீக்கும் சிகிச்சை அளித்தது.
தற்போது சேகர், பூரண நலம் பெற்று, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அவருக்கு, மருத்துவர்கள் பூங்கொத்து கொடுத்து அனுப்பி வைத்தனர்.