/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளி சிறுமியிடம் அத்துமீறிய 'பெருசு' கைது
/
மாற்றுத்திறனாளி சிறுமியிடம் அத்துமீறிய 'பெருசு' கைது
மாற்றுத்திறனாளி சிறுமியிடம் அத்துமீறிய 'பெருசு' கைது
மாற்றுத்திறனாளி சிறுமியிடம் அத்துமீறிய 'பெருசு' கைது
ADDED : ஆக 17, 2025 12:34 AM
புளியந்தோப்பு,
மாற்றுத்திறனாளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 67 வயது முதியவர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணிற்கு, மாற்றுத்திறனாளியான 10 வயது மகள் உள்ளார். இவர், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 14ம் தேதி மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த சிறுமியை, வீட்டருகே வசிக்கும் சுப்ரமணி, 67, என்ற முதியவர், தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த, பக்கத்து வீட்டில் வசிக்கும் சாந்தி என்பவர், சிறுமியை மீட்டுள்ளார்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரித்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின்கீழ், சுப்பிரமணியை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.