/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசார் கண் முன் பெண்ணிடம் செயின் பறிப்பு
/
போலீசார் கண் முன் பெண்ணிடம் செயின் பறிப்பு
ADDED : ஜூன் 29, 2025 12:14 AM
குரோம்பேட்டை,
குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே, போலீசார் கண்ணெதிரே, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின், 5 சவரன் செயினை, மர்ம நபர் பறித்து சென்றார்.
சென்னை வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த ரவிகுமார், 50; தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி குணசுந்தரி, 48. இருவரும், நேற்று முன்தினம், தாம்பரத்தில் நடந்த உறவினர் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க, இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
நிகழ்ச்சி முடிந்து, இருவரும் வீட்டிற்கு திரும்பினர். குரோம்பேட்டை சிக்னல் அருகே சென்றபோது, மெதுவாக பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், குணசுந்தரி கழுத்தில் அணிந்திருந்த, 5 சவரன் செயினை அறுத்து, மின்னல் வேகத்தில் பறந்தார். சம்பவ இடத்தில், போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தும், அவர்கள் கண் முன்னே வழிப்பறி நடந்தது.
இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு, மர்ம நபரை தேடி வருகின்றனர்.